மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் போது வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
சேலம் , ஈரோடு, நாமக்கல் மாவட்ட பகுதிகளின் வழியே செல்லும் வலது கரை வாய்க்கால் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், இடது கரை வாய்க்கால் மூலம் 27 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில் சங்ககிரி அடுத்த பொன்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்காலில் முட்புதர்கள், செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேட்டூர் அணை திறக்கப்படுவதற்குள் தண்ணீர் தடை இன்றி கடைமடை வரை செல்ல ஏதுவாக வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யும்படி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.