சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வந்த 22 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கோப்பைகள், கைப்பைகள், டம்ளர்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் இவற்றை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் சேலத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 22 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டன. விதிகளை மீறி செயல்படும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.