பனைமரம் நமது கலாசாரத்தோடும், கிராம பொருளாதாரத்தோடும், தமிழர்களின் வாழ்வியலோடும் தொடர்புடைய ஒரு மரம்.
நீர் நிலைகளின் கரைகள்தோரும் வளர்க்கப்பட்டு வந்த இந்த கற்கபதருக்கள் இன்றைய வணிக உலகில் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பல லட்சம் சல்லி வேர்கள், நீர் நிலைகளின் கரைகளுக்கு பலமாக நீரினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மைக்கொண்டது. இதனோட வேருங்க எல்லாம் மண்ணுக்குள் ஆழமா போய், நிலத்தடி நீரை தனக்குள்ள பிடிச்சு வச்சுக்கும்.
இது தெரிச்ச காரணத்தாலதான் நம்ம முன்னோர் எல்லாம் ஏரி குளம் குட்டைன்னு நீர் நிலைகளோட கரைகள் முழுக்க இந்த மரத்த நட்டு வச்சு பாதுகாத்து வளர்த்தாங்க.
வறட்சி காலங்கள்ல, காத்துல இருக்கிற ஈரப்பதத்தை ஈர்த்து, அத அப்படியே பூமிக்கு அடியில போற தன்னுடைய, லட்சக்கணக்கான சல்லி வேர்கள்ள நீரை சேகரிச்சு வச்சுக்கிற தன்மை இதற்கு மரத்துக்கு இருக்கு.
எல்லோரும் சொல்றாங்க பனை மரம் நட்டா அடுத்த தலைமுறைக்குதான் பலன அனுபவிக்க முடியும்னு..
அப்படியெல்லாம் இல்ல….
உண்மை என்னன்னா….9, 10ஆண்டுகள்ள நாம அதிலிருந்து நுங்கு சாப்பிடலாம். இதுக்கு இடையில நமக்கு தேவையான ஓலைகள் மட்டைகள்னு அதிலிருந்து நிறைய கிடைக்கும்.
அது எப்படி வளருது தெரியுமா …
வாங்க தெரிந்துக்கலாம் …
விதய நட்டு 22வது நாள்ல விதையலிருக்கிற குறுத்து மண்ணுக்குள்ள இறங்கும்..தொடர்ந்து 40வது நாள்ல கிழங்கு உருவாகும். 3வது மாசத்துல முறி கிழங்கு என்ற நிலையை அடையுது.
இந்த 4மாசம் வரைக்கும், இதனோட வளர்ச்சி நிலையில ஒரு அதிசயம் நடக்குது, அது என்ன தெரியுமா…
முறி கிழங்கு அடுத்த நிலை வரும்போது கொட்டையினோட உள்ளே இருந்தே தனக்கு வேண்டிய உணவை அது தயாரிச்சிகிது. அதுக்கு பேரு தவண்-னு சொல்வாங்க. அது வெள்ள கலர்ல இருக்கும். இந்த தவண் தீர்ந்ததும் கிழங்கோட வேர் தான் வளர்வதற்கான உணவை தேட மண்ணுக்குள்ள போக ஆரம்பிக்கும்
இதன்பிறகுதான் நிலத்திக்கு மேல மரத்தோட இளம் ஓலைகள் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கிறது.
ஒரு 9ஆண்டுகள் கழிச்சு பார்த்தீங்கன்னா 15அடிவரைக்கும் வளர்ந்து இருக்கும். இதுக்கு பேரு வடலிபனை ன்னு சொல்வாங்க.
இதுல ஆண் பெண் வகைகள் உண்டு
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கு
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
ஆச்சரியமா இருக்கு இல்ல
இந்த மரத்தோட ஒவ்வொறு பாகமும் நமக்கு பலவகைல பயன்படுது. நம்ம வாழ்க்கையோட அத்தனை நிலைகள்ளையும் இந்த மரத்தோட பயன்பாடு இருந்துகிட்டே இருக்கு மரம், ஓலை, நுங்கு, பனம்பழம், பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கல்கண்டு, பனஞ்சீனி, கைவினைப்பொருட்கள் என பல பயன்களை இந்த மரம் நமக்கு தருகிறது.
இதுல இருக்கிற மருத்துவ குணங்களால தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துல இதிலிருந்து கிடைக்ககூடிய பொருள்களை பயன்படுத்துறாங்க. மெக்னீசியம், இஸானிசைட், போன்ற சத்துகளோட பி12 சத்தும் இருக்கிறதால ரத்தவிருத்திக்கு இது பயன்படுகிறது.
ஒரு மரம் வளர்ந்தாலே அது பல உயிர்ளோட வாழ்விடமா அது மாறிவிடுகிறது. அதுப்போலதான் பனைமரமும் பல்லுயிர்களின் வாழ்விடமாகவும் இருக்கு.
100பனை மரங்கள் ஒரு பகுதியில இருந்தால் அது ஒரு காட்டிற்கு ஈடு. காற்றிலிருந்து நச்சுக்களை எல்லாம் தனக்குள்ள எடுத்துகிட்டு அதற்கு பதிலா மருத்துவம் நிறைந்த உணவுகளை பனைமரம் நமக்கு தருது
ஒரு காலத்துல கோடிக்கணக்காக இருந்த பனைமரங்கள் இப்போதைய நிலையில 10சதவீதத்துக்கும் குறைவா இருக்கிறதா சொல்றாங்க.
கோடிக்கணக்கான மரங்கள் எரிப்பொருளுக்காகவும் நவீன நகர உருவாக்கம் இரசாயணங்கள் கலந்த உணவுப்பொருள்களின் தாக்கம் போன்ற காரணங்களால நமக்கு எல்லாவகையிலும் பயன்தந்துக்கொண்டிருந்த பனைமரங்கள வளர்த்தவங்களே வெட்டிவீழ்த்திட்டாங்க என்பது பெருத்த சோகத்தை தரக்கூடிய ஒன்னு.
பனைமரம் வளர நாம அதுக்கு எதுவும் செய்யறதில்லை. ஆனா எந்த பிரதிபலனும் பார்க்காம அதுகிட்ட இருந்து நமக்கு எல்லாத்தையும் வாரி வழங்கிட்டு இருக்கு
நாம் நம்ம நண்பர்கள தேர்ந்தெடுக்கும்போதுக்கூட பனைமரம் போன்ற நண்பர்கள தேர்ந்தெடுப்போம்
இனிமேலாவது இப்போ இருக்கிற பனைமரங்கள அழியாம காப்பாத்துவோம். நம்ம இளம் தலைமுறையிடம் பனைமரத்தோட முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி பனைமரங்கள் செழித்து வளர்ந்து நமக்கு பயன்தர முயற்சிகளை முன்னெடுப்போம்