எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்றான் புரட்சிக்கவி.
காலமாற்றத்தில் பயனற்றுப் போனது இந்த வரிகள். படைப்பின் மாற்றத்தில் உலகிற்கு கிடைத்த பொக்கிஷமே திருநங்கையரும், திருநம்பியரும்.
போதும் அவர்களை ஒதுக்கியது. நம்மைப்போல் அவர்களும் மனித இனம் என்பதை உணர்ந்து ஆதரிப்போம் அவர்களையும். அன்புக்கரம் நீட்டுவோம். குடிமகனாய் அல்ல. சகோதரனாய்.
கே.ஆர். தோப்பூரில் உள்ள திருநங்கையர் காலனியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்ட திருநங்கையருக்கு சமூக சேவகரும், பாஜக மாநில விவசாய அணி செயலாளருமான ஆர்.பார்த்தசாரதி அவர்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், வங்ணப்புடவைகள் மற்றும் சுவையான உணவுகளை வழங்கினார்.
தன்னுடைய விடியல் பயணத்தில் திருநங்கையருக்கும் இடமுண்டு. மற்றவர்களைப் போன்றே அவர்களின் வாழ்வில் மலர்ச்சி பொங்கிட தன்னால் ஆன முயற்சிதான் இது என்று பார்த்தசாரதி குறிப்பிட்டார்..
ஆதரவுக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஆர்.பார்த்தசாரதியிடம் நன்றி தெரிவித்த திருநங்கையர் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவிடும்படி கேட்டுக் கொண்டனர்.