கோடை விடுமுறை காரணமாக பலர் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்து தமிழ் திரை உலகில் கடந்த மே மாதம் மட்டும் 22 திரைப்படங்கள் வெளியாகின . ஆனால் வசூல் ரீதியில் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை.
அரண்மனை 4 தவிர மற்ற பெரும்பாலான படங்கள் வசூலில் தோல்வியை தழுவி இழப்பை சந்தித்தன. ஸ்டார் திரைப்படம் ஓரளவு வசூல் ஆனாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. நல்ல கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியானதாக சொல்லப்பட்டாலும் போதிய ஆதரவு அந்த படங்களுக்கு கிடைக்கவில்லை.
நீண்ட வருடங்களுக்கு பிறகு ராமராஜன் நடித்த திரைப்படம் வந்திருந்தும் அதற்கும் ரசிகர்களின் ஆதரவு இல்லை . கடுமையான விமர்சனங்களை கடந்து பிடி சார், பகலறியான் ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு ஓரளவு வசூலை தந்ததாக சொல்லப்படுகிறது. மே மாத கடைசி நாளன்று வெளியான திரைப்படங்களில் கருடன் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதன் வசூல் 25 கோடியை கடந்துள்ளது. எனினும் மற்ற படங்கள் இழப்பை சந்தித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ் திரைத்துறைக்கு இந்த பாதை எதிர்காலமாக இருந்து விடக் கூடாது. மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றவாறு கதைக்களங்களுடன் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும் .
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் விரைவில் அடுத்தடுத்து வர உள்ளன. அவை வசூலை வாரிக் குவித்தால் மட்டுமே தமிழ் திரை உலகம் பெரும் இழப்பிலிருந்து தப்பிக்க இயலும்.