சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் கைகளில் சங்கிலி கட்டியபடி பேசிய 44 வது வார்டு உறுப்பினர், தனது தொகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சேலம் இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தில் ஓதிய மின் வசதிகள் ஏற்படுத்தப்படாததால் மாநகராட்சிக்கு வருமானம் பாதித்துள்ளதாகவும் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறிய நிலையில் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.