சேலத்தை தலைநகராக்கி தமிழகத்தை இரண்டாக பிரிக்க மக்கள் விரும்புவதாக மாநில பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படியே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினார் .
தமிழகத்திற்கு 234 சட்டமன்ற தொகுதிகள் தேவையில்லை என்றும் 134 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலமும், 100 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலமும் இருந்தால் ஆட்சியை சிறப்பாக நடத்த முடியும் என்றும் கே பி ராமலிங்கம் கூறினார்.
தனக்கு ஒரு மகன் மட்டுமே இருப்பதால் மாநிலத்தை இரண்டாக பிரிக்க முதலமைச்சர் தயங்குவதாகவும், சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார் .
கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர் பணத்திற்காக கொலை செய்யும் நபர்கள் அதிக அளவில் தமிழகத்தில் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என்று கூறும் தமிழக அரசு, ஏற்கனவே இரண்டு முறை நிதி வழங்கியதற்கான கணக்குகளை வழங்க தயாராக இருக்கிறதா என்றும் கணக்கு கேட்பார்கள் என்று பயந்து தான் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்ததாகவும் பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்தார்.