கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீ விபத்து உள்ளிட்ட பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிதியுதவிகளை விட, விஷ சாராயம் குடித்து உயிரிழப்போருக்கு அதிக அளவு நிதி உதவி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது .
இதன் மீதான விசாரணையின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த அடிப்படையில் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கள்ளச்சாராயம் குடிப்பது சட்ட விரோதம் . அப்படி இருக்கும்போது இழப்பீடு எதற்கு என்றும் கேள்வி கேட்டநீதிபதிகள் இழப்பீடு தொகையை மறு பரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி கூறி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.