தமிழக அரசாக பாஜக கொடியேற்றும் நாள் வரும்

2026 இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்ற மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என நம்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழகத்திற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கிடைத்திருப்பதாக தெரிவித்தார் .

இழந்த அந்தஸ்தை தமிழகம் மீண்டும் பெறவேண்டும் என்றும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்ல 2026 இல் கோட்டையில் தேசிய கொடி ஏற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என நம்புவதாக அண்ணாமலை கூறினார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்