மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களும் இதனால் தங்கள் நிலைத்தன்மையில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொலைகள் முன்விரோதத்தால் நடத்தப்பட்டவை என அமைச்சர் ஒருவரே கூறி இருப்பது தமிழகத்தில் ரவுடிகளின் கட்டமைப்பு பலமாகி இருப்பதையே உணர்த்துகிறது. அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு இருந்தும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவே முதலமைச்சர் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர் .
இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். பல மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை ஈர்க்கச் செய்யும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இது போன்ற சம்பவங்களால் தொழில்துறையினர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதுடன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டச் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. அப்போதுதான் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும்.