தமிழகத்தில் உள்ள 38000 கோயில் நிதிகளில் முறைகேடுகள் நடக்கிறதா ? – உச்ச நீதிமன்றம் கேள்வி..!

கோவில்களின் நிதியில் முறைகேடுகள் நடப்பதாகவும், பெரும்பாலான ஆலயங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை மீண்டும் திரும்ப வழங்க உத்தரவிட கோரி ஆலயம் காப்போம் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணையின் போது, தமிழக கோவில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உண்டியல் காணிக்கை நிதியை செலவிட ஏதேனும் திட்டம் உள்ளதா? சமூக நலத்திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை, சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்தினால் தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்