தங்க தட்டு வடை- அதிகாரிகள் அதிரடி

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு பிரசித்தமானது . இந்த வரிசையில் நமது சேலத்துக்கு தட்டுவடையை சொல்லலாம்.

நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் இந்த தட்டு வடை விற்பனை நடக்கும். ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளில், தட்டு வடை செட்டுகள் நாள்தோறும் விற்பனையாகிக் கொண்டே இருக்கிறது.

அம்மாபேட்டையில் உள்ள ஒரு கடையில் அட்சய திருதியை தினத்திற்காக தங்கத் தட்டு வடை செட் விற்பனை நடைபெற்றது. இதில் உலர் பழ வகைகள், காய்கறிகள் ,கோல்ட் பாயில் பேப்பர் அதாவது தங்க பேப்பர் இவையெல்லாம் அதில் சேர்க்கப்பட்டது . ஒரு செட் தங்கத் தட்டு வடையின் விலை 150 ரூபாய் வரை இருந்தது.

இதேபோல திருவிக சாலையில் உள்ள ஒரு தட்டுவடை கடையில் 24 கேரட் தங்கத்தட்டுவடை விற்பனை செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் இந்த செய்தி அணுகாமல் இல்லை.

உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்குள் நுழைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கோல்ட் பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் விற்பனையாளர்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்