நம் முன்னோர்கள் வானில் நிகழ்வு நட்சத்திரங்களில் இயக்கங்களை கண்டுணராக ஆரம்பித்தனர். கோள்களின் நகர்வு நம் பூமி பந்தில் இயற்கை மாறுதல் நடைபெறுவதை உணர்ந்தார்கள்.இதன் மூலம் நாம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையும் இந்தப் பிரபஞ்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிந்து கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டே சோதிடக் கலை உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது
ஆரம்ப காலத்தில் இந்த ஜோதிடக் கலை வானிலை தொடர்பு கொண்டதாகவே இருந்தது என சொல்லலாம்
பின்னர் இந்த சோதிடக் கலை இந்து தெய்வங்கள் என்பதோடு தொடர்பு படுத்தப்பட்டு விட்டன. கோள்களின் நகர்வுகளை வைத்து இயற்கை நிகழ்வுகளை முதலில் கணித்துள்ளனர் குறிப்பாக திடீர் மழை வரும் காலங்கள், வெள்ளம், கடுமையான வெயில், இயற்கை சிற்றங்கள் குறித்து கோள்களின் துணைக் கொண்டே கனித்தார்கள் நம் பண்டைய மக்கள்.
நம் நாட்டைப் பொறுத்தவரை தனிப்பட்ட மனிதனின் பிறப்பு கல்வி உத்தியோகம் திருமணம் உள்ளிட்ட அனைத்தும் ஒரு மனிதனின் அனைத்து நிகழ்வுகளும் இந்த சோதித்த வைத்தே கணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கு மாற்று கருத்து உடையோரும் தோன்றி இவற்றை எதிர்த்துள்ளனர்
இந்து மதத்தின் தூதராக தம்மை வெளிப்படுத்திக் கொண்ட சுவாமி விவேகானந்தர் கூட சோதிடத்தின் மீதான நம்பிக்கையை எதிர்த்து தான் கருத்து தெரிவித்துள்ளார்
‘பொதுவாகவே ஜோதிடம் மற்றும் பல மர்மமாக சொல்லப்படுகிற அனைத்தும் பலவீனமான மனதை உடைய மனிதர்களின் நம்பிக்கைகள்’
– என்றே அவர் கூறுகிறார்.
இதனை நாம் புறந்தள்ளி விடவும் முடியாது ஏனெனில் நம் நாட்டில் மட்டும்தான் இதை நம்பிக்கைகள் பரவலாக உள்ளது மேலை நாடுகளில் எல்லாம் நம் நாட்டில் உள்ள அளவிற்கு நம்பிக்கைகள் குறைவாகவே உள்ளதை நாம் காணலாம்
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சில நாடுகளில் கடவுள் குறித்தான நம்பிக்கைகள் கூட கிடையாது ஆனால் அவர்கள் தான் உலக நாடுகளின் முன்னணியில் உள்ளனர் என்பது கவனிக்கதக்க ஒன்று
ஆதலால் ஜோதிடம் என்பது நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்து இருந்தாலும் அதன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டியதும் அதனை அறிவியல் தொடர்புகளை கண்டறிய வேண்டியதும் அவசியமான ஒன்று
அதே வேளையில் ஜோதிடம் எனும் பெயரில் நடக்கும் மோசடிகளையும் மூட பழக்கங்களிம் மூழ்கி நம் வாழ்க்கையை தொலைத்து விடாமல் கவனமாக இருந்து பாதுகாத்துக் கொள்வதும் நம் அனைவரின் கடமையாகும்.