சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (7ம் தேதி) 2500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இவ்விழாவை யொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த பல்வேறு அமைப்பி னர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜவினர், ஆன்மீக குழுவினர் பலரும் விநாயகர் சிலை களை வாங்கி சென்று பல பகுதிகளில் பிர திஷ்டை செய்வற்கான ஏற் பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகர பகு திகளில் 1200 விநாயகர் சிலைகள் நாளை மறுநாள் பிரதிஷ்டை செய்யப்படுகி றது. இதேபோல், மாவட்ட பகுதியில் 1,300க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளனர். நாளை மாலை அந்தந்த பகுதியில் தெருக்களில் போடப்பட்டுள்ள பந்தலுக்குள்ளும், கோயில்களிலும் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து வைக்கவுள்ளனர். நாளை மறுநாள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளனர். அடுத்தநாளில் இருந்து சிலைகளை விஜர்சனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளை நோக்கி பொது மக்கள் எடுத்துச் செல்லவுள்ளனர்.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விழாக்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாது காப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசாரும், மாவட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணி யில் ஈடுபடவுள்ளனர்.