சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இவரது படுகொலை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்களாக 55 ஆம் வார்டு திமுக கவுன்சிலர் தனபாக்கியத்தின் கணவர் சதீஷ் உள்ளிட்ட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் .
ரியல் எஸ்டேட் தொழிலில் சண்முகம் ஈடுபட்டிருந்ததால் தொழில்போட்டி காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா, அரசியல் பகை அல்லது முன் விரோதம் காரணம் நடைபெற்ற கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.