சேலத்துல ஒரு காபி 300 ரூபாயா…!!!

காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டீ அல்லது காபி குடிப்பது நம் எல்லோரின் வழக்கம். வெளியில் சென்றாலும் அதற்கென இருக்கும் கடைகளில் அவற்றை வாங்கி குடிப்பது வாடிக்கை.

காஃபி வர்த்தகம் பெருக தொடங்கியுள்ள நிலையில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொன்றாய் இதில் ஈடுபட தொடங்கியுள்ளன. டீக்கடைகள் புழக்கத்தில் இருந்து மறைந்து பெரிய பெரிய நிறுவனங்களின் டீக்கடை கிளைகள் புற்றிசலாய் பெருகி வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது சேலத்திற்கு வர இருக்கும் புதிய அமெரிக்க காஃபி கடை STARBUCKS. கார்ப்பரேட் காபி

உலகம் முழுவதும் 25 ஆயிரம் கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனத்திற்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் திறக்கப்பட்டுள்ள ஸ்டார்பக்ஸ்க்கிற்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சேலத்தில் அடுத்த கிளை துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் டி என் சி மினி மாலில் துவங்க உள்ள இந்த கடையில் ஒரு காபியின் விலை சுமார் 300 ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தனை செலவு செய்தும் காபி குடிக்க பலர் தயாராகவே உள்ளனர். ஆனால் நடுத்தர மக்களுக்கு எப்போதுமே 20 அல்லது 30 ரூபாய் செலவு செய்து காபி குடிப்பதை தான் விரும்புவர்.

இந்த கடையின் வரவால் சாதாரண டீக்கடைகள் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னையில் இதற்கு கிடைத்த ஆதரவால் ஐந்து கிளைகள் துவங்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டி உள்ளது.

எத்தனை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் உள்ளூர் வியாபாரிகளை தான் நாம் முதலில் வாழவைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இது போன்ற காஃபி கடைகளை வரவேற்போம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்