அண்மைக்காலமாக சேலம் மாநகராட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் சேலத்தில் நேற்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்த அவர் கொலையாளிகள் கைது தாமதமாவது குறித்தும் அறிவுறுத்தினார். மாநகரில் பல்வேறு இடங்களில் லாட்டரி விற்பனை நடைபெறுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார் . தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீதான நடவடிக்கை மற்றும் போதை ஊசி போதை மாத்திரை விற்பனை தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஏடிஜிபி கேட்டறிந்தார்.