தமிழ்நாடு பிரீமியர் லீகின் முதல் ஆட்டத்தில் கோவை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீகின் எட்டாவது சீசன் சேலத்தில் தொடங்கியது. திருநெல்வேலி, திண்டுக்கல் , சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறுகின்றன.
நேற்று மாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது அடுத்து ஆடிய சேப்பாக்கம் அணியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரண்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.