சேலம் கோட்டை மாரியம்மன் ஆலய திருப்பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆடித்திருவிழா எளிமையாக நடத்தப்பட்டது. குடமுழுக்கு நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது.
கொடியேற்றம் கம்பம் நடுதல், திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து நேற்று சக்தி கரகம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
8 ஆண்டுகளுக்குப் பின் உருளுதண்டம் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி உருளு தண்டம் போட்யொட்டி டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இவர்களுக்கென தற்காலிக ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.
பொங்கல் வைத்தல் மற்றும் உருளுதண்டம் நிகழ்வு நாளை மறுதினம் வரை நடைபெற உள்ளது.
கோட்டை மாரியம்மன் ஆலயத்தை தொடர்ந்து குகை மாரியம்மன், தாதகாப்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் இன்று பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.