ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த கிணற்றுக்கு கம்பி வலையுடன் கூடிய பாதுகாப்பு அரண் – சமூக சேவகர் ஆர்.பார்த்தசாரதிக்கு மக்கள் நன்றி
500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சேலம் மாவட்டம் பெரிய புத்தூர் பெரியார் நகரில் திறந்த வெளி கிணறு ஒன்று உள்ளது.
குழந்தைகள் விளையாட கூடிய இடத்திற்கு அருகே ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கும் இந்த கிணற்றை மூடித் தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளிடமும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதனை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெரியார் நகர் மக்களின் இந்த கோரிக்கை குறித்து தெரியவந்ததும் , தமிழ்நாடு மாநில பாஜக விவசாய அணி செயலாளரும் சமூக ஆர்வலருமான ஆர்.பார்த்தசாரதி அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தார்.
45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பி வலையுடன் கூடிய பாதுகாப்பு அரணை கிராம மக்கள் பயன் பெறும் வகையில் அமைத்து தந்தார்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றாலும் சமூக பொறுப்புணர்வுடன் உடனடியாக செயல்பட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய சமூக சேவகர் ஆர்.பார்த்தசாரதி அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு வசித்து வரும் கிராம மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, தம்மால் இயன்றவரையில் அனைத்து குறைகளையும் போக்குவதாக சமூக சேவகர். ஆர்.பார்த்தசாரதி உறுதியளித்தார்.