காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு முறையாக வழங்க வேண்டிய தண்ணீரை தர முடியாது என கர்நாடகம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அனைத்து கட்சி சட்டசபை தலைவர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடி சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.