அட்சய திருதியை தினத்தில் தங்கம் விலை ஒரேடியாக மூன்று முறை உயர்ந்ததால் கடைகளில் தங்கம் வாங்க சென்றோர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர் .
வழக்கமாக தங்கத்தின் விலை காலை மாலை என இரண்டு நேரங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இது நாளொன்றுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. ஆனால் அட்சய திருதியை தினத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக மூன்று முறை உயர்ந்துள்ளது .
காலையில் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53280 ஆக விற்பனை செய்யப்பட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் 360 ரூபாய் உயர்ந்து 53640 ரூபாயாக விலை மாறியது.
மாலை 3 மணிக்கு மேல் இதன் விலை மேலும் 520 அதிகரித்து 54160 ஆக இருந்தது.
அன்றைய நாளின் இறுதியில் ஒரு கிராம் தங்கம் 670 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து விலை மாறுபட்டு வந்த நிலையில் கடைகளில் நகை வாங்க வந்தோர் பெரும் குழப்பம் அடைந்தனர். வரும்போது ஒரு விலை வாங்கும் போது மற்றொருவிலையா என அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் வாங்கும் ஆபரணத்தின் அளவை குறைத்து வாங்கிச் சென்றனர்.