சேலத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன்கள் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சேலம் செட்டிச்சாவடி பஞ்சாயத்து அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவருக்கும் அவரது உறவினரான செட்டிச்சாவடி அண்ணாநகரை சேர்ந்த முருகன் (46) என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தகராறு முற்றிய நிலையில் அடிதடி ஏற்பட்டது. இதில் முருகனை, கந்தசாமி மற்றும் அவரது 4 மகன்களும் சேர்ந்து கடுமையாக தாக்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்கு றிச்சி போலீசார், கந்தசாமி (70), அவரது மகன்களான ஏழுமலை (44), பரமன் (40), பழனிவேலு (39), கேசவன் (37), ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி நம்பிராஜன், தந்தை, மகன்கள் உள்பட 5பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 31 ஆயிரம் அபராதமும் விதித்தார்.