எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ ஆன்லைன் ரம்மி..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாயை இழந்த விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் .

எடப்பாடி அடுத்த சின்ன மணலி பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து விசைத்தறி தொழில் நடத்தி வந்தார் . கடந்த ஆறு மாதங்களாக ஆன்லைன் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஐந்து லட்சம் ரூபாயை இழந்துள்ளார் இதில் விரக்தி அடைந்த அவர் நான்காம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் .

சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து உயிரிழந்தார். ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை உயிர்களை காவு கேட்டு காத்திருக்கிறதோ என பல தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனர். மற்றொரு உயிர் போகும் முன் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்