சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் நடைபெற்ற கம்பம் நடும் விழாவை தொடர்ந்து, நேற்று அம்மனுக்கு தங்க கவசம் போர்த்தப்பட்டு பல்வேறு நறுமணம் மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும் வழிபாடு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தந்த அம்மனுக்கு, ஏராளமான பக்தர்கள் உருளுதாண்டம் போட்டு தங்கள் செலுத்தினர். கடந்த 7 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உருளுதாண்ட நேர்த்திக்கடன், இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது..