இப்போதிலிருந்து தயாராகுங்கள் மாணவர்களே….

2027ல் 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு காத்திருக்கு…. எந்த துறை தெரியுமா?

ஒரு காலத்தில் மேல்படிப்பு என்றாலே அது மருத்துவமும், பொறியியலும் தான். அந்த அளவிற்கு அதன் மீதான ஆர்வம் பள்ளிப்படிப்பு முடிக்கும் மாணவர்களிடையே மேலோங்கி இருந்தது. படிப்படியாக அது குறைந்து கணினி தொடர்பான படிப்புகள் வளம் பெற தொடங்கின. புதிது புதிதாய் வருகை தந்த தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் அந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது . அது இன்றும் பெரும்பாலும் தொடர்ந்தே வருகிறது.

கணினி துறை படிப்புகளின் அடுத்த பரிணாமம் செயற்கை நுண்ணறிவு . 2022 ஆம் ஆண்டிலிருந்து அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்த துறையின் முக்கிய தொழில்நுட்பமான சாட்ஜ்பிட்டியின் அறிமுகம் பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கி பல துறைகளிலும் விரிவுபடுத்தி வருகின்றன.

இதற்கான தேவைகள் அதிகரித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேலைக்காக 12.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேவைப்படுவர் என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

2030ல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அதிநவீன தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா அதிகார மையமாக மாறும் நிலை உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறமையும், தரத்தை உயர்த்துவதற்கான பணிகளிலும் ஈடுபட வேண்டும் . மேலும் தற்போதுள்ள பணியாளர்களின் திறமைகளை மேலும் அதிகரிப்பது, வலுவான அரசு , கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பும் இந்த இலக்கை நோக்கி முன்னேற அவசியம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்