ஆகஸ்ட் மாதத்திற்கு தமிழகத்திற்கு 45.9 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு
காணொளி வாயிலாக நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு ஏற்கனவே போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் உபரி நீரை கணக்கில் சேர்க்காமல் தமிழகத்திற்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை திறக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் 45.9 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் வினீத் குப்தா உத்தரவிட்டார்.