அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ10 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சின்ன சேலத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் மூலம் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த விஜய லட்சுமணன் என்பவர் அறிமுகமானார். அப்போது அவர் அரசு வேலை வாங்கி தருவதாக வெண்ணிலாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ஆனால் அவர் வெண்ணிலாவுக்கு அரசு வேலை ஏதும் வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து அவரிடம் கொடுத்த பணத்தை வெண்ணிலா திரும்ப கேட்டார். ஆனால் 10 லட்சம் ரூபாயை கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து வெண்ணிலா சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மோசடி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த மோசடி தொடர்பாக விஜயலட்சுமணன், தண்டபாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்