தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை நடத்திய கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் தமிழ் எழுத படிக்க தெரியாது என ஐந்து லட்சம் பேர் தெரிவித்துள்ளனர். அடிப்படை தமிழ் கூட தெரியாத அளவிற்கு இம்மாநிலத்திலேயே பிறந்தும் வசித்தும் வருகிறார்கள் .
இதில் சிறப்பு என்னவெனில் சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 40,191 பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. இதில் 29,176 பேர் பெண்கள்.
இது நீடித்தால் தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும். இதனால் ஏற்படும் அவப்பெயரை போக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவை பெற்ற மாவட்டங்களாக ஆக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கென சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக முறைசாரா கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.