மின்னல் எப்போதும் ஏன் பனைமரம் மீது விழுகிறது? தெரிந்து கொள்ளலாமா…

பெரும்பாலும் பனை மரங்களில் இடி, மின்னல் விழுவதை பார்த்திருப்போம். பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களை தணிக்கும் தனித்துவமான திறனை கொண்டுள்ளன. இந்த இயற்கை பாதுகாப்பு நெறிமுறையானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் போன்ற அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக உள்ளது.

இதனை கவனத்தில் எடுத்து இந்தியாவின் ஒடிசா மாநில அரசு மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிக அளவில் பனை மரங்களை பயிரிட தொடங்கியுள்ளது. சுமார் 1.9 மில்லியன் பனை மரங்களை நடுவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் மின்னல் தாக்குதல்களால் 3790 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்குதல்களை தணிப்பதில் பனை மரங்கள் திறம்பட செயல்பட முதன்மையான காரணங்களில் ஒன்று அவற்றின் அதிக ஈரப்பதம் ஆகும். பனை மரங்களின் தண்டுகளில் நீர் நிரம்பியுள்ளது. இது மின்னல் தாக்குதலிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும். இந்த அதிக ஈரப்பதம் இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது. இதனால் மின்னல் தாக்கும் போது பெருமளவு சேதம் இருக்காது.

இதன் உயரமும் மற்றொரு காரணம். சுற்றியுள்ள தாவரங்களை விட உயரமாக இருப்பதால் மின்னல் தாக்குதலின்போது அவை பாதுகாக்கப்படுகின்றன. மின்னலின் தாக்குதல்களை தணிப்பதில் பனைமரங்களின் பங்கு, சுற்றுச்சூழல் சவால்களுக்கு இயற்கை எவ்வாறு தீர்வுகளை வழங்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

இந்த இயற்கையான பாதுகாப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் மின்னலின் ஆபத்துகளில் இருந்து மனித உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உண்டாக்கலாம்.

மின்னல் தாக்குதல் அதிகம் நடக்கும் இடங்களில் இந்த யுக்தியை தமிழக அரசு பின்பற்றினால் பனை தொழிலும் மேலும் செழித்தோங்கும். மின்னல் தொடர்பான பாதிப்புகளும் குறையும்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்