நண்பேண்டா…. அடப்பாவி …

உங்கள் நண்பர்

உங்களிடம் வந்து டேய் மச்சான்… இந்தா விஷம் …சாப்பிடு …
என்று கொடுத்தால் என்ன செய்வீங்க…?

ஏன்….எதுக்கு எனக்கு விஷம் கொடுக்கிற…
அதுவும் என்னிடம் சொல்லியே கொடுக்கிறாயா… உன்னை என்ன செய்கிறேன் பார்
-என்று நமது நண்பரிடம் சண்ட போட்டு வெட்டு குத்துவரை போய்டுவோம்தானே..?

ஆனா இங்க பாருங்க…
நடக்கிறதே வேறயா இருக்கு….

நீண்ட காலமாக நட்பு கொண்டவர்கள், ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அதில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் நஞ்சைக் கொடுத்து
” நண்பா! இந்த நஞ்சை உண்பாயாக ” என்று வேண்டுகிறார்.
மிகுந்த நட்புடைய சான்றாண்மை மிக்க அந்த நண்பர் அது நஞ்சு எனத் தெரிந்திருந்தும் அதனை உண்டு மேலும் அவரோடு நட்பு கொள்வார்.
என்று நற்றினையின் 355வது பாடல் வரிகள் சொல்கிறது.

நண்பர்கள் என்று தம்மிடம் நெருங்கிப் பழகுபவர்கள் எதைக் கொடுத்தாலும், அது நஞ்சாக இருந்தாலும்கூட நாகரிகம் கருதி உண்ணும் உயர்ந்த நாகரீகத்தை உடைய மக்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்து உள்ளார்கள்.
அவர்கள் நட்புக்கு சிறப்பு கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள்.

” முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் ” – நற்றிணை – 355


டேய் …என்னங்கடா நீங்கெல்லாம்ன்னே கத்ததானே தோணுது…..

ஆனா அப்படி இல்ல அது …

பின்ன எப்படி அப்படின்னா …

அந்த அளவிற்கு நண்பனுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர்களாக அந்த கால நண்பர்கள் இருந்து இருக்காங்க

நண்பன் விஷம் கொடுக்க மாட்டான்…..

அப்படி கொடுப்பது விஷமா இருந்தாலும் அது நம்மை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கைதான் அது..

இந்த காலத்துல அப்படி யாராவது இருக்காங்களா….

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்