ஒவ்வொரு ஆண்டும், புலிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் அழிந்து வரும் இந்த பெரிய பூனைகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதிலும் இந்த நாள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உள்ளது. ஆன்லைன் ஈடுபாடு மற்றும் புலி தொடர்பான ஆர்வத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை, ராயல் பெங்கால் மற்றும் சைபீரியன் போன்ற பல வகையான புலிகள் ஒவ்வொன்றும் அதனதன் வாழ்விடங்களில் மிகவும் கம்பீரமாகவும் இயல்பாகவும் வாழ்கின்றன.
அவை எதிர்கொள்ளும் அவசர அச்சுறுத்தல்களான வாழ்விட இழப்பு, மனித-வனவிலங்கு மோதல் மற்றும் வேட்டையாடுதல் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும், உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புலிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றன.இந்த நாளில்
புலிகளின் பாதுகாப்பு, அவைகளின் முக்கிய அச்சுறுத்தல்களான வசிப்பிட அழிப்பு மற்றும் வேட் டையாடுதல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது .
காடுகளை அழித்தல், அவற்றின் பாகங்கலான காணுயிர்களை வேட்டையாடுதல் மற்றும் மனிதர்களுடன் மோதல்கள் போன்றவற்றால் புலிகள் வாழ்விட இழப்பு, அவற்றின் இனப்பெருக்கம் குறைதல் போன்ற பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2010 இல் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டின் போது சர்வதேச புலிகள் தினம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.