சேலம் அருள்மிகு ஸ்ரீ நீர் விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நீர் மாரியம்மன் தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா…

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் செம்மாண்டப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீர் விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நீர் மாரியம்மன் மற்றும் நவகிரக பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

குடமுழுக்கு நிகழ்வை ஒட்டி, கடந்த 14ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் சக்தி அழைத்தல், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக ஊமக்கவுண்டன்பட்டி காளியம்மன் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.

சேலத்தின் பிரபல சமூக சேவகரும், பாஜக தமிழ் மாநில விவசாய அணி செயலாளரும், ஸ்ரீநீர் மாரியம்மன் ஆலய கமிட்டி தலைவருமான ஆர்.பார்த்தசாரதி தலைமையில் மேளதாளம் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் ஏந்தியபடி சுமார் 3கிலோமீட்டர் தூரம்வரை வெகு விமர்சையாக நடைபெற்ற ஊர்வலம் செம்மாண்டப்பட்டி ஸ்ரீ நீர் மாரியம்மன் ஆலயத்தில் நிறைவடைந்ததது.

பின்னர் மாலை மங்கள இசை, கும்ப அலங்காரம், முதற் கால பூஜையுடன் மகா தீப ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9மணி அளவில் கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது . பின்னர் மகா தீபஆராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

சரியாக காலை 8மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ நீர் விநாயகர் ஸ்ரீ நீர் மாரியம்மன் கோபுரம் நவகிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.

நீர் மாரியம்மன் கோவில் கமிட்டி தலைவரும், சேலத்தின் சமூக ஆர்வலரும், தமிழக பாஜகவின் மாநில விவசாய அணி செயலாளருமான ஆர்.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இந்த மகா குடமுழுக்கு விழாவில் பாஜகவின் தமிழக மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர்களை மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்ற விழாக்குழுவினர் அவர்கள் இருவருக்கும் பட்டு பரிவட்டம் கட்டி மாலை மரியாதையுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

கே பி ராமலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற வணிகவரி இணை ஆணையர் வி மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் ஆர்.பார்த்தசாரதி அவர்களால் கும்பம் கோபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

குடமுழுக்கினைக் கான பல ஊர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கினைத் தொடர்ந்து நாளை முதல் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்