படித்ததால் உயர்கல்விக்கு பயணிக்கும் பழங்குடியின மாணவி –
பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற சேலம் பழங்குடியின மாணவி சுகன்யா திருச்சி NIT யில் சேர்ந்துள்ளார
கல்வராயன் மலையில் உள்ள வேலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின மாணவியான சுகன்யா. கரிய கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர், மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
NIT யில் உற்பத்தி பொறியியல் பிரிவில் சேர உள்ளார் சுகன்யா. ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலே தமது வெற்றிக்கு காரணம் என்று பெருமையுடன் கூறிய மாணவி, தைரியமாக தேர்வுகளை மாணாக்கர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவி சுகன்யாவுடன் திருச்சி துறையூர் பச்சைமலை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணியும் JEE தேர்வில் வெற்றி பெற்று திருச்சி NIT யில் பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
திருச்சி NIT யில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவிகள் இவர்கள் இருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வழி பற்றி மற்ற மாணவர்களும் கல்வியில் கண்ணாய் இருந்து உயர்கல்விக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.