நம்மளோட குழந்தைகள் நல்ல முறையில் வளர்றதுக்காக நம்ம முன்னோர்கள் ஏராளமான வழிமுறைகளை சொல்லிக் கொடுத்திருக்காங்க. காலங்கள் மாற மாற ஒவ்வொன்னையா நாம மறந்துட்டு வரோம்.
இன்னிக்கி நம்ம குழந்தைங்க கிட்ட கேட்ஜெட்டுங்க வந்துட்டதால அவங்க விளையாட்டு அப்படின்றதையே மறந்திடறாங்க. இதனோட பாதிப்பு அவங்க பெரியவங்களா ஆகுறப்ப தான் உணர முடியும் .
நம்ம மூதாதையருங்க சொன்னதுல ஒரு விஷயம் மரக்குதிரை விளையாட்டு ஏன் அதை வச்சு விளையாட சொன்னாங்க? அதனால குழந்தைகளுக்கு என்ன நன்மை ? விரிவா பார்க்கலாம் .
ரெண்டு வயசுல இருந்து நாலு வயசு வரைக்கும் இருக்கிற குழந்தைங்க மரக்குதிரையை பயன்படுத்துறதால அவங்களோட காதுக்குள்ள இருக்கிற வெஸ்டிபுலர் (vestibular movement) அப்படின்ற இயக்கம் வேலை செய்யுது.
சமநிலை, அசைவு , ஈர்ப்பு விசை, வேகம் இதையெல்லாம் குழந்தைகளோட தோலின் கீழே இருக்கிற தசைகள்ல இருக்கிற உணர்வு நரம்புங்க உள்வாங்கி மூளைக்கு தெரிவிக்கிற செயலுக்குப் பேருதான் வெஸ்டிப்புலர் இயக்கம்.
இத தூய தமிழ்ல செவி மூன்றில் அப்படின்னு சொல்லலாம்.
அமெரிக்காவுல இருக்குற அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாரிக் (American acadamy of paediatric) அப்படின்ற குழந்தைகள் நல மருத்துவத்தோட தலைமையகம் தங்களோட நாட்டுல இருக்கிற இரண்டு வயசுக்கு மேலான குழந்தைகளுக்கு மரக்குதிரை விளையாட்ட பரிந்துரைச்சிருக்காங்க.
சாதாரண குழந்தைங்க மட்டுமில்லாமல் சிறப்பு குழந்தைகளுக்கும் அவங்களோட குறைபாட்டில் இருந்து விடுபடறதுக்கு இந்த முறை உதவியா இருக்குதுன்னு அவங்க சொல்லி இருக்காங்க.
இதே போல அட்லாண்டாவுல இருக்கிற அசோசியேஷன் ஆஃப் அகாடமிக் பிஸியா ட்ரஸ்ட் ( Association of acadamic physiatrists) அப்படின்ற அமைப்பு நடத்தின ஆய்வுல நம்மளோட மரக்குதிரை விளையாட்டு ஹிப்போதெரபின்ற பெயருல வெளிநாடுகளில் உயிருள்ள குதிரைகள் மேல சவாரி செஞ்சு செயல்படுத்தப்படுது.
குழந்தைகளால உயிருள்ள குதிரைங்க மேல சவாரி செய்ய முடியாதுன்னு தான் நம்ம மூதாதையருங்க இந்த மரக்குதிரையை வடிவமைச்சிருக்காங்க.
குழந்தைங்க மரக்குதிரை மேல இருக்கிறப்போ அவங்களோட கால், முக்கிய தசைகளை பயன்படுத்தி அந்த குதிரையை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்த்தும். இதனால குழந்தைகளோட கைகளும் விரல்களும் முழுசா பயன்படுத்தப்படும். உடலோட முழு இயக்கமும் கை , கால்கள் அப்புறம் தொடைய ஒருங்கிணைச்சு பயன்படுத்துறதையும் குழந்தைகள் கத்துகிறாங்க.
கேட்கவே ஆச்சரியமா இருக்கு!
அறிவியலோட பேரால நமக்குத் தெரிஞ்சதை எல்லாம் நாம மறந்துட்டும், இழந்துட்டும் வரோம். ஆனா அறிவியல்ல அதி தீவிரமா இருக்கிற நாடுகள் நம்ம நாட்டுல இருந்து எடுத்துகிட்ட பழக்கத்தையே அறிவியலாக்கி இன்னும் மேல போய்கிட்டு இருக்காங்க.
இனிமேலாவது நாம தொலைச்சது எல்லாத்தயும் மீட்டு நம்ம தலைமுறைகளுக்கு கொடுப்போம்.