5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ,ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். ஜூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்
மிக நீண்ட பகல் நேர நாளாக உள்ள இந்நாள் பல உலக நாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாகவும் உள்ளது. என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஆம் நாளை ‘சர்வதேச யோகா தினமாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த நாளை ஒட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்