“இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!”

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் . குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். நம்மைச்சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக்கருதியதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே அவர்களுக்கு இருந்தது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. இந்நிலைக்குக் முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கட்தொகை பெருக்கம்தான். சுதந்திரம் பெரும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.

இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது.

‘பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் சாக நேரிடலாம்.

சரி சாமான்யனாக நாம் என்ன செய்யலாம்? வெப்பத்தை குறைக்க, கட்டுக்குள் வைக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கலாம்?

அதுபோல, மின்சார வாகனங்களை தேர்ந்தெடுங்கள். விமான போக்குவரத்தை விட, தொடர்வண்டி போக்குவரத்தே சால சிறந்தது.

இயன்றால் உங்களது வணிக பயணத்தை ரத்து செய்துவிட்டு, காணொளி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்துங்கள்.

நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது பொது போக்குவரத்தை உறுதி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுங்கள்”.

அதாவது இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள்.மின்சாதன பொருட்களை வாங்க செல்லும் போது, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் மின்சாதன பொருளா என்று பாருங்கள். 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy)-க்கு மாறுங்கள். தண்ணீர் சூடேற்றும் சாதனம் முதல் உங்கள் மொபைல் சார்ஜர் வரை சூர்ய ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம் உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.  உங்கள் பகுதியில் எது விளைகிறதோ, அதனை உண்ணுங்கள்.

நம் நுகர்வை குறைத்துக் கொள்வது மற்றும் பொருட்களை தூக்கி எறியாமல் கூடுமானவரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான்.

இது தண்ணீருக்கும் பொருந்தும்.

இது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடுங்கள். இந்த விஷயத்தை கொண்டு சேருங்கள்.

வளங்குன்றா வாழ்வு குறித்து விருப்பமுடையவர்கள் ஒன்றிணையுங்கள்.

நாளைய தலைமுறைக்கு இந்த புவி மிச்சம் இருக்க வேண்டுமென்று நினைத்தால் நாம் இதனை செய்ய வேண்டும். “இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!”

– என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நாளைய தலைமுறை மோசமான பிரச்சனையை எதிர்கொள்ள இந்த தலைமுறை செய்த தவறுகள் காரணமாக அமைந்துவிட வேண்டாம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்